நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் “நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
நேர்மையான அரச சேவைக்கான “நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் 2026 ஜூலை 27ஆம் திகதியன்று பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கச் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் நேர்மை சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளப்பட்டதுடன் பிரதேச செயலாளரினால் “சட்டத்தை மதிக்கும் நேர்மைமிக்க அரச சேவை” எனும் தொனிப்பொருளிலான விசேட உரையாற்றப்பட்டது.
நாவிதன்வெளி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. சீ. நிருபா, கணக்காளர் க. றிஸ்வி யஹ்சர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகராணி கிருபைராஜா, நிருவாக உத்தியோகத்தர் O. G. K. குசுமிந்த, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு. செ. சிவம் ஆகியோருடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
















