வாணி விழா நிகழ்வுகள் - 2022
நாவிதன்வெளி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த வாணி விழா 04/10/2022 அன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை சிவஸ்ரீ. ரீ.தேவகுமார் குருக்கள் நடாத்தி வைத்தார். இதன்போது பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இப்பூஜை வழிபாடுகளில் உதவி பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன், உட்பட பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள் மற்றும் ஏனைய அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




இந்நிகழ்வின் மேலதிக புகைப்படங்களை காண இங்கே கிளிக் செய்து பார்வையிடலாம்.















