கிராம மட்ட மகளிர் சங்க அங்கத்தவர்களுக்கு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம மட்ட மகளிர் சங்க அங்கத்தவர்களுக்கான சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வானது நாவிதன்வெளி பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.டெ.றொசாயிறோ அவர்களின் ஒருங்கிணைப்பில் 2023.09.19 ஆந் திகதியன்று நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் இரா.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திரு.பே.பிரணவரூபன் அவர்களும் கலந்து கொண்டதுடன் இச்செயலமர்விற்கான வளவாளராக சட்டத்தரணி திருமதி்.சு.மனோகரன் அவர்கள் பங்குபற்றினார். அக்கரைப்பற்று Islamic Relief நிறுவனம் இதற்கான அனுசரணையினை வழங்கியிருந்தது.



















