விஷேட தேவையுடைய மாணவர்களை ஒன்றிணைக்கும் கலாசார நிகழ்வு

நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான கலாசார நிகழ்வானது 2024.06.25 ஆந் திகதியன்று கமு/சது/றாணமடு இந்துக் கல்லூரியில் கல்லூரி அதிபர் திரு. கே. கதிரைநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் திரு. எஸ். மகேந்திரகுமார் அவர்களும் விஷேட அதிதியாக Deaflink நிறுவனத்தின் இணைப்பாளர் திரு. ரீ. இளையராஜா அவர்களும்  கௌரவ அதிதியாக நாவிதன்வெளி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திரு. பே. பிரணவரூபன் அவர்களும் கலந்து கொண்டனர்.

விஷேட கல்விப் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களின் கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், அனைத்து மதங்களை பிரதிபலிக்கும் வகையிலான நிகழ்வுகள் மற்றும் அவர்களின் உணவு முறைகள் தொடர்பான தகவல்களும் காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும் இந்நிகழ்வில் கமு/சது/றாணமடு இந்துக் கல்லூரி மற்றும் வீரத்திடல் அல்-கிதாயா மகா வித்தியாலயம் ஆகியவற்றின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுடன் நாவிதன்வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வுக்கான நிதி அனுசரணையை Deaflink நிறுவனம் வழங்கியிருந்தது.

spcial education culture event 2024 1

spcial education culture event 2024 2

spcial education culture event 2024 3

spcial education culture event 2024 4

spcial education culture event 2024 5

spcial education culture event 2024 6

 

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top