அஸ்வெசும 2ஆம் கட்ட எண்ணீட்டாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு 2024

நலன்புரி நன்மைகள் சபையின் “அஸ்வெசும” கொடுப்பனவு திட்டத்திற்கான 2ஆம் கட்ட தரவு உள்ளீடு எண்ணீட்டாளர்களுக்கான பயிற்சி செயலமர்வானது நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் 23 ஜூலை 2024 ஆந் திகதியன்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் “அஸ்வெசும” 2ஆம் கட்ட தரவு சேகரிப்பில் ஈடுபடும் கிராம அலுவலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்தல் தொடர்பான தெளிவூட்டல்களை நாவிதன்வெளி பிரதேச செயலக நலன்புரி நன்மைகள் பிரிவின் சிரேஷ்ட நலன்புரி தகவல் உத்தியோகத்தர் வழங்கினார். மேலும் இவ் எண்ணீட்டு நடவடிக்கைகளுக்கான மென்பொருள் பாவனை தொடர்பான வழிகாட்டல்கள் பிரதேச செயலக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் உத்தியோகத்தரினால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கான நிதி அணுசரனையை நலன்புரி நன்மைகள் சபை வழங்கியிருந்தது.

aswesuma enumerators training 2024 1

aswesuma enumerators training 2024 2 min

aswesuma enumerators training 2024 3 min

aswesuma enumerators training 2024 4 min

aswesuma enumerators training 2024 6 min

aswesuma enumerators training 2024 5 min

 

 

 

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top