நலன்புரி நன்மைகள் செலுத்துதல் தொடர்பிலான பொது மக்களுக்கான அறிவித்தல் - 2022

நீங்கள், தற்போது சமுர்த்தி கொடுப்பனவு, முதியோருக்கான கொடுப்பனவு, அங்கவீனர்களுக்கான கொடுப்பனவு, சிறுநீரக நோய்க்கான கொடுப்பனவு, அரசின் பொது நிதி உதவி, இவை தவிர்ந்த வேறு ஏதேனும் மாதாந்த உதவித்தொகை பெறுகின்றவர்களாக இருப்பின் அல்லது இந்நலத்திட்டங்களுக்கு புதிதாக விண்ணப்பிக்க விரும்புகின்றவர்களாக இருப்பின்,

நலன்புரி நன்மைகள் சபையின் விஷேட அறிவித்தலுக்கமைவாக 2002ஆம் ஆண்டின் 24ம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் நலன்புரி நன்மைகள் செலுத்துதல் தொடர்பில் தகுதியான நபர்களை கண்டறிவது தொடர்பான விண்ணப்ப படிவத்தினை நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.wbb.gov.lk  எனும் முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்து முறையாக பூரணப்படுத்தி செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் உங்கள் கிராம அலுவலர் அலுவலகங்களுக்கு வருகைதரும் பிரதேச செயலகத்தினால் நியமிக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் சமர்ப்பிக்குமாறும் அத்துடன் இணையத்தளம் ஊடாக விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்பவர்கள் மேற்படி உத்தியோகத்தர்களிடம் விண்ணப்ப படிவத்தினை பெற்றுக்கொள்ளவதுடன் படிவத்தினை பூர்த்திசெய்தல் தொடர்பான ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

 

மேலும் அலுவலக உத்தியோகத்தர்களிடம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான இலவச விநியோகத்திற்கான விண்ணப்ப படிவங்களே வழங்கப்பட்டுள்ளதால் முன்னுரிமை அடிப்படையிலேயே அவ் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

விண்ணப்ப முடிவு திகதி: 30 செப்டம்பர் 2022

 

Annoucnement page 0001 min

 

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top