இரண்டாம் மொழி கற்கையை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு - 2023

அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட இரண்டாம் மொழி (சிங்களம்) 150 மணித்தியாலங்களை கொண்ட பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் இம்மாதம் 11ஆந் திகதியன்று இடம்பெற்றது. இதில் பிரதேச செயலகங்கள், பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் கடமையாற்றும் குறித்த பாடநெறியை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்கள் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.

இப்பாடநெறியின் வளவாளர் திரு.ஏ.எச்.நாசிக் அவர்கள் தலைமை தாங்கிய இந்நிகழ்வுக்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திரு.எஸ்.ரங்கநாதன், உதவி பிரதேச செயலாளர் திரு.பி.பிரணவரூபன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன் மேலும் நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் திரு.றிஸ்வி யாசர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.தி.கிருபைராஜா, நிருவாக உத்தியோகத்தர் திரு.கி.யோகேஸ்வரன், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.மனோஜ் இந்திரஜித், சமுர்த்தி பீட முகாமையாளர் திரு.எஸ்.சிவம் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

Sinhala language certificate ceremony 2023 2

Sinhala language certificate ceremony 2023 1

Sinhala language certificate ceremony 2023 3

Sinhala language certificate ceremony 2023 4

 

 

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top