2025 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல்

2025 ஆம் ஆண்டின் முதலாம் அலுவலக நாளாகிய 2025.01.01 ஆந் திகதியன்று இந்த ஆண்டின் கடமைச்செயற்பாடுகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் பிரதேச செயலாளர் திருமதி. .ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

அஸ்வெசும 2ஆம் கட்ட எண்ணீட்டாளர்களுக்கான பயிற்சி செயலமர்வு 2024

நலன்புரி நன்மைகள் சபையின் “அஸ்வெசும” கொடுப்பனவு திட்டத்திற்கான 2ஆம் கட்ட தரவு உள்ளீடு எண்ணீட்டாளர்களுக்கான பயிற்சி செயலமர்வானது நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் 23 ஜூலை 2024 ஆந் திகதியன்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

விஷேட தேவையுடைய மாணவர்களை ஒன்றிணைக்கும் கலாசார நிகழ்வு

நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான கலாசார நிகழ்வானது 2024.06.25 ஆந் திகதியன்று கமு/சது/றாணமடு இந்துக் கல்லூரியில் கல்லூரி அதிபர் திரு. கே. கதிரைநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

காட்டு யானைத்தாக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்கல் 2024

நாவிதன்வெளி பிரதேச செயலக  பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானை தாக்கங்களால் பாதிக்கப்பட்டு சொத்துக்களை இழந்தவர்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவுகள் ஜூலை 16 ஆந் திகதி 2024 அன்று நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலாளர் திரு. சிந்தக்க அபேவிக்ரம அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.

தேசிய கைகழுவும் வாரம் மற்றும் தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் - 2024

தேசிய கைகழுவும் வாரத்தினை முன்னிட்டு நாவிதன்வெளி சுகாதார வைத்திய பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நாவிதன்வெளி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு கூட்டமானது பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் 2024.06.24 ஆந் திகதியன்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top